1. செய்திகள்

TNAUவின் புதிய பயிர் வளர்ச்சி ஊக்கி தொழில்நுட்பம்- காப்புரிமை வழங்கியது மத்திய அரசு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNAU's New Crop Growth Technology - Patented by Central Government!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்  (TNAU) உருவாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி ஊக்கி திரவத்திற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விதை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பயிர் வளர்ச்சியை மேம்படுத்தும் புரத சத்துக்களை உள்ளடக்கிய பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம்' உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி ஊக்கியின் பயன்கள் (Benefits)

  • இந்தப் புரத திரவத்தை, 1 - 15 சதவிகித அளவில் பூக்கும் தருணத்திற்கு சற்று முன்பும், பூக்கும் தருணத்திலும் பயிர்களின் இலைவழியாக தெளித்தபோது, நெல், பருத்தி மக்காச்சோளம் ஆகிய அனைத்து பயிர்களிலும் 15 சதவிகிதம் மகசூல் அதிகரித்தது.

  • மேலும் பூசுதலின் 40 சதவிகித அளவில் இப்புரததிரவத்தைக் கொண்டு விதை முலாம் மூலமாக, விதைகளின் முளைப்புத்திறன் 6 - 8 சதவிகிதம் உயர்ந்ததோடு, நாற்றுக்களின் வீரியமும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டது.

  • இதை தவிர, விதைப்பதற்கு முன் 0.5 - 0.75 சதவிகிதம் இப்புரத கரைசலில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து பின் விதைப்பதாலும் விதை முளைப்புத்திறன் 6-10 சதலிகிதம் அதிகரித்து பலன் அளித்ததைக் காண முடிந்தது.

இந்த பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் சீட் எய்ட்' மற்றும் 'நியூட்ரிகோல்ட் என்ற இருவேறு வடிவங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, விதை மையத்தை சார்ந்த முனைவர்கள் இரா.உமாராணி, அவர்கள் தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு இந்திய காப்புரிமை பெற விண்ணப்பித்திருந்தனர்.

உரிய பரிசீலனைகள் மற்றும் நேர்காணலுக்குப் பிறகு சென்னை காப்புரிமை அலுவலகம் புரதத்தை பிரித்தெடுத்தல் மற்றும் விதை நேர்த்தி மற்றும் இலைவழி தெளிப்பு' மூலமாக மகருலை மேம்படுத்தும் தொழில்நுட்பத்திற்கான, இந்திய அரசின் காப்புரிமையை  (Patent Rights) வழங்கியுள்ளது

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர், முனைவர். நீ குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க...

புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!

English Summary: TNAU's New Crop Growth Technology - Patented by Central Government!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.