விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காங்., தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
-
அரசு வேலைவாய்ப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு
-
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்து உணவு, உறைவிடம் வழங்கி 3 ஆண்டுகள் குடிமைப் பணி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியமர்த்தப்படும்.
-
புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை
-
கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை
-
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்
-
விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்
-
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்
-
ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்
-
உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை
-
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு
-
தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
-
சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்
-
இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்களில், ஆகம விதிக்குட்பட்டு அர்ச்சகராகப்பாடசாலைகளில் பயின்று தேர்ச்சி பெற்ற இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணிபுரியும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.7,500 உழவு மானியம்: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!
Share your comments