TNPSC நடத்தும் Group II & II A (Interview / Non.Interview Posts) அடங்கியுள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு வரும் 21.05.2022 சனிக்கிழமை நாளை நடைபெறவுள்ளது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் 136 தேர்வு மையங்களில், மொத்தம் 37,366 தேர்வர்கள், இப்போட்டித் தேர்வினை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் மாற்றம் தொடர்பாக ஆட்சியர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு -II - Group 2 & 2 A {Interview/Non Interview Posts) அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு வரும் 21.05.2022 (சனிக்கிழமை) அன்று முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. விலாசம் பற்றிய தகவலுக்கும் மேலும் படிக்கவும்.
மேலும் படிக்க: ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்ய RTO-க்கு அதிகாரம் கிடையாது
TNPSC: தேர்வுகளில் பயோமெட்ரிக் அறிமுகம், எப்போது?
தேர்வு மையங்களில் இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு-II - Group II & II A {Interview/Non Interview Posts) அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வினை தருமபுரி மாவட்டத்தில் எழுத உள்ள தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் நல்லம்பள்ளி வட்டம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nalampalil Taluk என குறிப்பிடப்பட்ட தேர்வு மையத்திற்கு பதிலாக "Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road" என்பதே தேர்வு மையமாகும். எனவே, Hall No.039.-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் "Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road" என்ற தேர்வு மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Live Update: 124ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!
Share your comments