தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் அடங்கிய குரூப் 3 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இளநிலை ஆய்வாளர் – கூட்டுறவுத்துறை (Junior Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 37 வயதிற்குள்ளும், MBC, BC, BCM பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,600 – 75,900
பண்டக காப்பாளர் – தொழில் மற்றும் வர்த்தகத்துறை (Store Keeper)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 47 வயதிற்குள்ளும், MBC, BC, BCM பிரிவினர் 44 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
Share your comments