பெரிதும் எதிர்ப்பார்த்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவினை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9 ஆம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
(2023-2024) ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை :7,60,606. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை: 4,08,440, மாணவர்களின் எண்ணிக்கை: 3,52,165. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 1. இதில் மாணாக்கர், பள்ளி, பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,19,196 (94.56%). மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 4.07 சதவீத மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 2023-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7,55,451. மொத்த தேர்ச்சி சதவிகிதம் 94.03%. கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்கள்:
- மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை- 7532
- 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை- 2478
- 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 397
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
- அரசுப் பள்ளிகள்- 91.02%
- அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.49%
- தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.70%
- இருபாலர் பள்ளிகள்- 94.78%
- பெண்கள் பள்ளிகள்- 96.39%
- ஆண்கள் பள்ளிகள்- 88.98%
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
- அறிவியல் பாடப் பிரிவுகள்- 96.35%
- வணிகவியல் பாடப் பிரிவுகள்- 92.46%
- கலைப் பிரிவுகள்- 85.67%
- தொழிற்பாடப் பிரிவுகள்- 85.85%
முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:
- இயற்பியல்- 98.48%
- வேதியியல்- 99.14%
- உயிரியல்- 99.35%
- கணிதம்- 98.57%
- தாவரவியல்- 98.86%
- விலங்கியல்- 99.04%
- கணினி அறிவியல்- 99.80%
- வணிகவியல்- 97.77%
- கணக்குப் பதிவியல்- 96.61%
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161 (92.11%). தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%). தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறியலாம். மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
மே 7 மற்றும் 8: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
MFOI 2024 விருது நிகழ்வின் நடுவர் மன்ற குழு தலைவராக NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் நியமனம்!
Share your comments