1. செய்திகள்

TNSAMB:10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tamil Nadu Jobs

தமிழக அரசின் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம், சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Agri with MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : B.Sc Computer Science or BCA. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

அலுவலக உதவியாளர் (Office Assitant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Chief Executive Officer, Tamilnadu State Agricultural Marketing Board, CIPET road, Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai – 32

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2022

மேலும் படிக்க:

பெட்ரோல் விலையில் ரூ.12 உயர்வு

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், புதிய அப்டேட்!

English Summary: TNSAMB: Government of Tamil Nadu jobs for 10th class graduates Published on: 06 March 2022, 07:13 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.