சென்னையில் 2ம் கட்டமாக 118.9 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் அவர் அறிவித்த பல அறிவிப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்தார். பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் எனவும், கூறிய மத்திய நிதியமைச்சர் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ. 63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும் எனவும், ஏற்கனவே 41,000 கி.மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மேலும் பல அறிவிப்புகளில் சிலவற்றை குறிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன காணுங்கள்.
பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மீது கிடைக்கும் லாபங்கள் மீது 30% வரி.
வருமான வரியை தவறாக தாக்கல் செய்திருந்தால் 2 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு.
மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பு.
2022-23 நிதியாண்டில் அரசின் செலவு 39.45 லட்சம் கோடி ஆக இருக்கும் எனவும், வரவு 22.8 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் அறிவிப்பு.
மத்திய வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகமாகும். ப்ளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் நடைமுறைக்கு வரும்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்ய ரூ. 2.37 லட்சம் கோடி செல்லத்தப்ப்படும்.
தபால் நிலையங்கள் அனைத்தும் வங்கிகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் தபால் நிலைங்களில் ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தணை செய்ய முடியும். இது ஊரக பகுதி மக்களுக்கு பயன்படும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் பல திட்டங்களையும், அறிவித்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும் படிக்க:
Steel Authority of India Limited-ல் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு! நேர்காணலுக்கு அழைப்பு!
2022 டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலை, டிஜிட்டல் மூலம் பார்க்க, செயலி அறிமுகம்
Share your comments