தீபாவளியை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் (Moving Food testing camps) வாயிலாக, இனிப்பு வகைகள் பரிசோதனை (Experiment) செய்யப்பட உள்ளன.
நடமாடும் உணவுப் பரிசோதனை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு வகைகளின் தயாரிப்பு (Production) அதிகரித்துள்ளது. இதில், செயற்கை வர்ணங்கள் (Synthetic paints) அதிகம் பயன்படுத்துவதோடு, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதனால், உணவு பொருட்களை பரிசோதனை செய்யும் பணியில், உணவு பாதுகாப்பு துறை (Department of Food Safety) அதிகாரிகள், ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, 'சரியாக சாப்பிடுதல் சென்னை (Eating Properly Chennai)' என்ற திட்டத்தின் கீழ், இனிப்பு மற்றும் கார வகைகளை பரிசோதனை செய்ய, நடமாடும் உணவு பரிசோதனை முகாம் நடத்தப்படுகின்றன.பாண்டி பஜார், தியாகராய நகரில் நேற்று மாலை நடந்த நடமாடும் உணவு பரிசோதனை முகாமை, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி (Seethalakshmi) துவக்கி வைத்தார்.
600 மாதிரிகள் பரிசோதனை:
இந்த முகாமில், அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டன. முகாமில், செயற்கை வர்ணம் அதிகம் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத இனிப்பு வகைகள் (Sweets), பார்வைக்கு வைக்கப்பட்டன. பின், கலெக்டர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு வகை விற்பனை மற்றும் தயாரிப்பு அதிகரித்துள்ளது. அவற்றின் தரத்தை (quality) சோதனை செய்யவே, இந்த நடமாடும் உணவு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. சென்னை முழுதும், 600 மாதிரிகளை பரிசோதனை செய்ய உள்ளோம். மக்களும், தங்களுக்கு சந்தேகம் உள்ள இனிப்பு வகைகளின் மாதிரிகளை, பரிசோதனை செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தீபாவளி பதார்த்தங்கள் தயாரிக்க, விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது எப்படி?
சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!
Share your comments