1. செய்திகள்

இன்றைய விரைவுச் செய்திகள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
(28-06-2022) Today's Quick News

1. மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளன என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொடர்பான மண்டல அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார்.

2. ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து, தானும் சைக்கிள் ஓட்டினார்.

3. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று நடைப்பெற்றது, இதன்படி மாநகர் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிட்., சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி(Collection Batta) குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அறிவித்துள்ளார்.

4. கோவையில் உள்ள தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது. இரண்டாண்டுகளை கொண்டமுதுநிலை பட்டப் படிப்பில் 400இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்டப்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புகல்வியாண்டு முதுநிலை மற்றும்முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கியுள்ளது. https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

5. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், இளநிலை படிக்கும் மாணவியருக்கான மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. வரும் 30ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சிறப்பு முகாம் அமைத்து, https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவியரின் விபரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. கடந்த மாதம் 8ம் தேதி, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நீர் விநியோகம் தொடங்கியது, தற்போது இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதால் வரும் ஜூலை 1 முதல் கிருஷ்ணா நீர் விநியோகத்தை நிறுத்து வைக்குமாறு ஆந்திர மாநில அரசுக்கு, நீர்வளத்துறை (WRD) கடிதம் எழுதியுள்ளது.

7. தமிழக விவசாயிகள், பெண்கள், இறுதியாண்டு மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், TNAU, கோயம்புத்தூர், ஐந்து நாள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சியை நடத்துகிறது. விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள், தயாரிப்பு தேர்வு, ஆவணங்கள், தளவாடங்கள், சந்தைப்படுத்தல், ஆதாரம் மற்றும் விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அனைத்து முக்கிய பகுதிகளிலும். இப் பயிற்சி கவனம் செலுத்தும். கோயம்புத்தூரில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தில் 2022 ஜூலை 4 முதல் 8 வரை இப் பயிற்சி நடைபெறும். இதற்கான முன்பதிவுகளுக்கான மின்அஞ்சல் eximabdtnau@gmail.com அல்லது business@tnau.ac.in மூலமாக செய்துக்கொள்ளலாம், மேலும் தொடர்பு எண்கள் 0422-6611310 அல்லது 9500476626 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்யலாம்.

8. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க:

மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் - ஜூலை மாதம் தொடக்கம்!

மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம்: அமைச்சர் தகவல்!

English Summary: Today's Quick News Published on: 28 June 2022, 11:53 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.