கொரோனாத் தொற்று அதிகரிப்பு காரணமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்கள் பதக்கம் பெறும்போது மட்டும், புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழற்றலாம் என ஒலிம்பிக் கமிட்டி அதிரடியாக அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட போட்டி (Postponed match)
கடந்த 2020ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக், கொரோனா வைரஸ் தொற்றால் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23-ல் கோலாகலமாத் துவங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் சங்கமும், ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும், கொரோனாத் தொற்று வீரர்களுக்குள் பரவாமல் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சிக்கல் (The problem)
இதனிடையே ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருவது, போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், வீரர்களை அனுப்பியுள்ள நாடுகளுக்கும், தர்மசங்கடத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சும் ஜப்பானியர் (Fearful Japanese)
இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகளால் தங்கள் நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமாகும் என ஜப்பானியர்கள் பலர் அஞ்சுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராகப் போராட்டம் வாயிலாக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.
பார்வையாளர்கள் இல்லை (No audience)
அதனால் ஒலிம்பிக் தீப ஓட்டம் போன்றவற்றைக் காணொளி காட்சி நிகழ்ச்சிகளாக மாற்றியது போட்டிக் குழு. தற்போதையப் போட்டிகளும் பெரும்பாலும் பார்வையாளர்களின்றி நடத்தப்படுகிறது.
புதிய விதி (New rule)
இந்நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது பற்றிய புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் விளையாட்டு நடைபெறும் இடத்திலும் சரி, வெளியேயும் சரி முக்கவசத்தை கழட்டக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளனர்.
விலக்கு (Exclude)
விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிகளின் போது மட்டும் முகக்கவசம் அணிவதில் விலக்கு உண்டு.
30 நொடிகள் (30 seconds)
மற்றபடிப் பதக்கம் வாங்கும் போது கூட முகக்கவசம் கட்டாயம் என கூறியுள்ளனர். புகைப்படத்திற்காக மட்டும் 30 நொடிகள் கழற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அவசியமே (The mask is essential)
இது பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், முகக்கவசம் அணிந்திருப்பது நன்றாக இருக்காது தான், இருந்தாலும் அணிய வேண்டியது அவசியமாகிறது.
தளர்வு இல்லை (There is no relaxation)
அதில் யாருக்கும் தளர்வில்லை. அனைவரையும் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம். இது விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், நமது ஜப்பானிய நண்பர்களுக்கும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஐஸ்கிரீம் குச்சிகளால் டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் !
டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக்: இந்தியா சார்பில் 125 பேர் பங்கேற்பு!
Share your comments