தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் 55 ரூபாயில் இருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 85 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் 1,960 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.
சுங்க கட்டணம் (Toll fee)
மினி லாரி, இலகு ரக போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் 115 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 170 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் 3,435 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
பேருந்து மற்றும் லாரிகளுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 230 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 300 ரூபாயில் இருந்து 345 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் 6,870 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
அதைபோல் பல அச்சுகள் கொண்ட கன ரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் 320 ரூபாயில் இருந்து 370 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 480 ரூபாயில் இருந்து 550 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் 11,035 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியாகி, வாகன ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
இவர்களுக்கு மட்டும் 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரம்பு மற்றும் கட்டணங்கள்: புதிய அறிவிப்பு!
Share your comments