1. மற்றவை

ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரம்பு மற்றும் கட்டணங்கள்: புதிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
ATM

அனைத்து அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிமாற்றங்கள் மற்றும் கட்டண அடிப்படையில் பரிமாற்றங்களை வழங்குகின்றன. பொதுத்துறை, தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் இலவச பரிமாற்றங்களுக்கு அதிகமாகச் செல்லும்போது கட்டணங்கள் விதிக்கின்றன.

ஏடிஎம் (ATM)

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களில் மாதந்தோறும் கட்டணமில்லாமல் 5 முறை பரிமாற்றம் செய்யலாம். அதற்கு மேல் செல்லும் பரிமாற்றத்துக்கு ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும். பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு கட்டணமில்லாமல் 3 முறையும், அதற்கு மேல் செல்லும்போது கட்டணம் செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்கள் அல்லாத நகரங்களில் மாதத்துக்கு 5 பரிமாற்றங்கள் செய்யலாம். இது ஒவ்வொரு வாடிக்கையாளரும் வைத்திருக்கும் டெபிட் கார்டு வகைகளைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும்.

ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட சுற்றிக்கையின்படி, இலவச பரிமாற்றத்துக்குப்பின் நடக்கும்ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.21 கட்டணாக வசூலிக்கப்படும். இது 2022, ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன் ரூ.20 கட்டணமாகவங்கிகள் வசூலித்தன. இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதிமுதல் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் பரிமாற்றக் கட்டணமாக ரூ.17, நிதிசாராத பரிமாற்றத்துக்கு ரூ.6 கட்டணமும் விதிக்கின்றன. முக்கிய வங்கிகளின் ஏடிஎம் கார்டு அல்லது டெபிட்கார்டுக்கு ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கும் அளவைக் காணலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)

கிளாசிக் டெபிட் கார்டு, சில்வர் மற்றும் கோல்டு டெபிட்கார்டு, கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.125 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி

யுவா மற்றும் கோல்டு டெபிட் கார்டுக்கு, மை கார்டு பிளஸ்ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.175+ஜிஎஸ்டி வரி, பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.250+ஜிஎஸ்டி , ப்ரீமியம் பிஸ்னஸ் டெபிட் கார்டுக்கு ரூ.350+ ஜிஎஸ்டி வரி, டெபிட் கார்டு மாற்றுதல் கட்டணம் ரூ.300+ ஜிஎஸ்டி, டூப்ளிகேட் பின் ரூ.50+ ஜிஎஸ்டி

ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank)

சேமிப்பு மற்றும் சம்பளக்கணக்கிற்கு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பரிமாற்றம். மெட்ரோ நகரங்களில் 3 பரிமாற்றம் இலவசம் அதற்கு மேல் சென்றால் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.21 கட்டணமாகும்.
மெட்ரோ நகரங்கள் இல்லாமல் இருந்தால் மாதத்துக்கு 5 பரிமாற்றங்கள் இலவசம், அதற்கு மேல் சென்றால் பரிமாற்றத்துக்கு ரூ.8.50கட்டணமாகும்.

நடப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 3 இலவச பரிமாற்றங்கள், அதன்பின் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ நகரங்கள் அல்லாதவற்றில் 5 பரிமாற்றங்கள் இலவசம்.அ தற்கு மேல் ரூ.21 கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும்.

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)

மாதத்துக்கு 5 முறை இலவசப் பரிமாற்றம். மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசபரிமாற்றம் செய்யலாம். மெட்ரோ நகரங்கள் அல்லாத நகரங்களில் ஏடிஎம்களில் இலவசப்பரிமாற்றத்துக்குப்பின் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும். பேலன்ஸ் பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட், அனைத்துக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆண்டுதோறும் ஏடிஎம் பராமரிப்பு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கி (Axis Bank)

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தினசரி ரூ.50ஆயிரம் வரை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். தினசரி பிஓஎஸ் பரிமாற்றம் ரூ.1.25 லட்சம். கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 4 முறை இலவசப்பரிமாற்றம் அல்லது ரூ.1.50 லட்சம் வரை எடுக்கலாம்.

அதன்பின் ஒவ்வொரு ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக தினசரி பணம் எடுத்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். வங்கி நேரத்துக்குப்பின் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் பணம் டெபாசிட் செய்தால், பரிமாற்றத்துக்கு ரூ.50 கட்டணமாகும். விடுமுறை நாட்களில் மாதத்துக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணம் விதிக்கப்படும்.

மாதத்துக்கு 5 முறை இலவசப் பரிமாற்றம். மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசபரிமாற்றம் செய்யலாம். மெட்ரோ நகரங்கள் அல்லாத நகரங்களில் ஆக்சிஸ் அல்லது ஆக்சிஸ் வங்கி அல்லாத ஏடிஎம்களில் இலவசப் பரிமாற்றத்துக்குப்பின் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும். கணக்கு இருப்பைக் கண்டறிய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க

புதிய திட்டம் அறிமுகம்: எஸ்பிஐ டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.!

வங்கி கடனை மற்றொரு வங்கிக்கு வேண்டுமா? எளிய வழிமுறை இதோ!

English Summary: ATM Withdrawal Limits and Charges: New Notice! Published on: 17 August 2022, 02:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.