சென்னை மாநகரில் தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சந்தைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.120-130 என்ற விலையில் விற்கப்படுகிறது. மற்ற மாநில சந்தைகளில் தக்காளி கிலோ 120 முதல் 130க்கு விற்கப்படுகிறது.
அவ்வாறே, கோயம்பேட்டில் முருங்கை ஒரு கிலோ 140க்கு விற்கப்படுகிறது. அதன் விலை உள்ளூர் சந்தைகளில் ஒரு துண்டு 35 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. காய்கறி வரத்து 75 டன்னாக குறைந்துள்ளது. மார்க்கெட் விற்பனையாளர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர், திரு. வி. ஆர். சௌந்தரராஜன், இந்த விலை உயர்வுக்கு காரணம் போதுமான அளவு முருங்கை இருப்பு இல்லாதது என்றார்.
மழையின் காரணமாக வரவிருக்கும் நேரங்களில் இது அதிகாரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். திண்டுகல் தேனி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் காய்கறிகளின் நகரமாக திகழ்கின்றன.
சென்னையை பொறுத்தவரை பீன்ஸ் விலையும் 100-130ஐ எட்டியுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகம் அதாவது (KWMC) மூன்றில் ஒரு பங்கு தக்காளிகளை மட்டுமே கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 04ஆம் தேதி) பெற்றுள்ளது , இதுவே தக்காளி விலை கிலோவுக்கு 20ரூபாய் அதிகரிக்க காரணமாகும்.
கோயம்பேடு மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் முன்னாள் தலைவர் எம்.தியாகராஜன் , சந்தையில் 300 டன் தக்காளிகள் மட்டுமே வந்துள்ளதாகவும், மேலும் சராசரியாக தினசரி 800 முதல் 900 டன் தக்காளிகள் வரத்து இருந்தது எனவும் கூறிப்பிட்டார் .
சமீபத்தில் , நாம் தக்காளிகளை சத்தீஸ்கர் மற்றும் மகராஸ்டிராவில் இருந்து பெற்றோம். தற்போது, ஆந்திரா கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்கிறோம், எனவே ஒரு கிலோ தக்காளி விலை , இரு நாட்களில் கோயம்பேடு சந்தையில் 90 முதல் 70 ரூபாயில் விற்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Tomato Price: பாதிக்கு மேல் குறைந்த தக்காளி விலை! விவசாயிகள் வருத்தம்!
Share your comments