1. செய்திகள்

குறைந்த பட்ஜெட்டில் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்- முழு விவரம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Electric scooter

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை, மக்களின் கவனத்தை மின்சார வாகனங்களின் பக்கம் ஈர்த்துள்ளது. பெட்ரோல் வாகனங்களை வாங்குவதா அல்லது மின்சார வாகனங்களை வாங்குவதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்குவதே இன்றைய காலகட்டத்தில் சரியான முடிவாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் பட்ஜெட் ரூ. 1.50 லட்சமாக இருந்து உங்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க விருப்பம் இருந்தால், சந்தையில் பல நல்ல ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் சிறந்த வரம்பையும் தருகின்றன, அவற்றின் செயல்திறனும் அபாரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது. ஸ்கூட்டரின் பேட்டரி 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். 60 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 25 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். நிறுவனம் ஸ்கூட்டருக்கு 70,000 கிமீ அல்லது ஏழு ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறது, பேட்டரி 50,000 கிமீ அல்லது 3 ஆண்டுகள் உத்தரவாதத்தைப் பெறுகிறது.

ஏதர் எனர்ஜி இ-ஸ்கூட்டர் ஏதர் 450 இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் Ather 450 Plus இன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,31,647. இரண்டாவது வேரியன்ட் Ather 450X இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,50,657. இ-ஸ்கூட்டர் ஏத்தர் 450 பிளஸ் முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை பயணிக்கும். ஏத்தர் 450 எக்ஸ் வகை 85 கிமீ வரை பயணிக்கும். இரண்டு வகைகளிலும், ஸ்கூட்டரின் மோட்டார் முறையே 5.4 kw மற்றும் 6kw பவரை அளிக்கிறது, 22Nm மற்றும் 28Nm இன் உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான கோமாகி கடந்த மாதம்தான் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியின் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,15,000 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 180-220 கிமீ வரை பயணிக்கும். நிறுவனத்தின் டீலர்ஷிப்பிற்குச் சென்றால் இந்த ஸ்கூட்டரை நேரடியாகப் பார்க்கலாம்.

Okinawa OKHI-90 இ-ஸ்கூட்டரின் விலை ஃபேம் டூ மானியத்திற்குப் பிறகு விலை ரூ.1,21,866 ஆகும். ஃபேம் டூ மற்றும் மாநில மானியத்திற்குப் பிறகு, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,03,866 ஆகும். இது வெறும் 10 வினாடிகளில் மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும்.

TVS மோட்டார்ஸின் இ-ஸ்கூட்டரான TVS iQUBE ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,07,938 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ வரை பயணிக்கும். இந்த ஸ்கூட்டர் சுமார் 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 4.4 கிலோவாட் ஆற்றலை உருவாக்குகிறது.

மேலும் படிக்க

ஒரே மிஸ் கால் மூலம் ,வீடு தேடி வரும் எல்பிஜி சிலிண்டர்- எப்படி?

English Summary: Top 5 Electric Scooters on a Low Budget - Full Details! Published on: 06 April 2022, 07:17 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.