1. செய்திகள்

வேளாண் துறையில் பட்டம் பெற விருப்பமா? இதோ உங்களுக்கான கையேடு

KJ Staff
KJ Staff
agricultural colleges

வேளாண்மை என்பது நமது இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இந்தத் துறையில் திறமையான நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேளாண்மையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம் பெற்ற பிறகு, ஒருவர் தனியார் மற்றும் அரசுத் துறையில் சேர்ந்து வேளாண் துறையை மேம்படுத்த இயலும். நீங்கள் வேளாண் அதிகாரி, உற்பத்தி மேலாளர், ஆராய்ச்சி விஞ்ஞானி, பண்ணை மேலாளர் மற்றும் பல்வேறு துறையில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாயத்தை உயர்த்த பல்வேறு பணிகளை புரியலாம்..

வேளாண் படிப்பை மேற்கொள்ள, விவசாயத்தில் தங்களுக்கென ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள சிறந்த வேளாண் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில்  சேர்ந்து சிறந்த கல்வியை பெற இதோ உங்களுக்கான ஒரு கையேடு.

tamil Nadu Agricultural colleges

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU), கோயம்புத்தூர்

1868 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சைதாபேட்டையில் வேளாண் பள்ளி என்ற பெயரில் நிறுவப்பட்டிருந்தது. அதன் பின்னர் கோவைக்கு மாற்றப்பட்டது இதன் கீழ் செயல்பட்டு வரும்  14 கல்லூரிகளில்
* இளங்கலை திட்டங்கள், (Under Graduate programs) 13
* பட்டதாரி திட்டங்கள் (Graduate programs) 40
* முனைவர் திட்டங்களை வழங்குகிறது. (P.hd programs) 26
இது 36 ஆராய்ச்சி மையங்கள்
14 பண்ணை அறிவியல் மையங்களையும் கொண்டுள்ளது.

IARI delhi

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI), தில்லி

இது "பூசா" (PUSA) என்று பிரபலமாக அறியப்படும் நிறுவனம். 1905 புதுதில்லியில் நிறுவப்பட்டது. 1958 ஆம் ஆண்டில், IARI ஒரு நிகர் நிலை பல்கலைழகம் என்ற அடையாளம் பெற்றது. தற்போது, ​​இந்த நிறுவனம்
* 20 பிரிவுகள்,
* அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டங்கள், (all-India coordinated research projects) 3
* பல்துறை மையங்கள், (multi-disciplinary centers) 5
* பருவகால நர்சரிகள், (off-season nurseries) 2
* பிராந்திய நிலையங்கள் மற்றும் (regional stations) 8
* தேசிய மையங்களை (national centers) 10 கொண்டுள்ளது. 
* என்விரான்மென்டல் சயின்ஸ்,( Environmental Sciences)
* பயோகெமிஸ்ட்ரி, (Biochemistry)
* பயோஇன்போமேட்டிக்ஸ், (Bioinformatics)
* ஹோர்டிகல்ச்சர், ( Horticulture)
* பிலோரிகல்ச்சர், (Floriculture)
* கம்பியூட்டர் அப்ளிகேசன், (Computer Application)
* புட் சயின்ஸ்,  (Food Science)
* பிளான்ட் பதோலஜி, (Plant Pathology)
* சீட் சயின்ஸ், (Seed Science)
* சோயில் சயின்ஸ் (Soil Science) போன்ற படிப்புகளை இந்த வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது.

ஆச்சார்யா என்.ஜி. ரங்க வேளாண் பல்கலைக்கழகம் (ANGRAU), ஹைதெராபாத்

12 ஜூன் 1964 இல் ஆந்திர மாநில வேளாண் பல்கலைக்கழகம் (APAU) என்ற பெயரில் நிறுவப்பட்டது.விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சேவையை புரிந்ததால் 1996 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆச்சார்யா என்.ஜி அவர்களின் நினைவாக ஆச்சார்யா என்.ஜி.ரங்க வேளாண் பல்கலைக்கழகம் என்று மாற்றப்பட்டது.
* வேளாண் துறையில் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் & டெக்னோலஜி மற்றும்
* ஹோம் சயின்ஸ் படிப்பிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.

CCSHAU Hisar

சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் (CCSHAU), ஹிஸார்

1970 இல் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 4  தனிநிலை கல்லூரிகளை கொண்டுள்ளது.

*காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர்,
*காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் & டெக்னோலஜி,
*காலேஜ் ஆப் ஹோம் சயின்ஸ் மற்றும்
*காலேஜ் ஆப் பேசிக் சயின்ஸ் & ஹுமானிடீஎஸ்.
இவ்வனைத்து கல்லூரிகளிலும் நன்கு திட்டமிடப்பட்ட விரிவுரை அறைகள், ஆய்வகங்கள், கருத்தரங்கு அறைகள், ஆடிட்டோரியம், கணினி ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
*அக்ரிகல்ச்சர், (Agriculture)
*ஹோம் சயின்ஸ்,
*புட் சயின்ஸ்,
*பேசிக் சயின்ஸ் & புட் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளை வழங்குகிறது.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் (UAS), பெங்களூரு

1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் நாட்டின் முதன்மையான விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும், இவை இளங்கலை,
முதுகலை மற்றும்
நான் டிக்ரீ (Non Degree) படிப்புகளை வழங்குகிறது.

PAU Ludhiyana

சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் (CCSHAU), ஹிஸார்

1970 இல் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 4  தனிநிலை கல்லூரிகளை கொண்டுள்ளது.

* காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர்,
* காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் & டெக்னோலஜி,
* காலேஜ் ஆப் ஹோம் சயின்ஸ் மற்றும்
* காலேஜ் ஆப் பேசிக் சயின்ஸ் & ஹுமானிடீஎஸ்.
இவ்வனைத்து கல்லூரிகளிலும் நன்கு திட்டமிடப்பட்ட விரிவுரை அறைகள், ஆய்வகங்கள், கருத்தரங்கு அறைகள், ஆடிட்டோரியம், கணினி ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
* அக்ரிகல்ச்சர், (Agriculture)
* ஹோம் சயின்ஸ்,
* புட் சயின்ஸ்,
* பேசிக் சயின்ஸ் & புட் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளை வழங்குகிறது.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் (UAS), பெங்களூரு

1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் நாட்டின் முதன்மையான விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும், இவை இளங்கலை,
முதுகலை மற்றும்
நான் டிக்ரீ (Non Degree) படிப்புகளை வழங்குகிறது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI)

இது 1889 இல் நிறுவப்பட்டது. IVRI என்பது கால்நடை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்
* வெட்டரினரி & அனிமல் சயின்ஸ், (Veterinary and Animal Science,)
* பேசிக் சயின்ஸ் & லைவ்ஸ்டாக் ப்ரோடாக்ட்ஸ் டெக்னோலஜி (Basic Sciences and Livestock Products Technology) ஆகிய 20 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பி.ஜி மற்றும் பி.எச்.டி படிப்புகளை வழங்குகிறது. 
* கால்நடை பராமரிப்பு, (Animal Husbandry)
* கால்நடை உயிரியல் பொருட்கள், (Veterinary Biological Products)
* கால்நடை இனப்பெருக்கம், (Animal Reproduction)
* கோழி வளர்ப்பு, (Poultry Husbandry)
* இறைச்சி பொருட்கள் தொழில்நுட்பம் (Meat Products Technology) போன்ற பிரிவுகளில் டிப்ளமோ படிப்பையும் வழங்குகின்றது.

மத்திய மீன்வள கல்வி நிறுவனம் (CIFE), மும்பை

1961 இல் நிறுவப்பட்ட CIFE இந்தியாவின் முன்னணி தேசிய மீன்வள பல்கலைக்கழகமாகும்.இது இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகின்றது. இது ஒரு தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல பிரபலமான அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்துள்ளது.

K.Sakthipriya
krishi Jagran

English Summary: Top agricultural colleges in India : Best Agri institutions and universities

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.