1. செய்திகள்

பாரம்பரிய விளையாட்டு: காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Cow Cart Racing in Karaikudi

மாட்டு வண்டிப் பந்தயம் காலங்காலமாக கிராமங்களில் நடத்தப்பட்டு வந்த ஒன்று. ஆனால், நவீன மயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் பாரம்பரிய விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி செல்கிறது. இதற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், காரைக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்று இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. காரைக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 58-வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் ஆகிய இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டன.

மாட்டு வண்டி பந்தயம் (CowCow Cart Racing) 

முதல் பரிசை நெல்லை மாவட்டம் வேலாங்குளம் கண்ணன் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி கவுசல்யா வண்டியும், 3-வது பரிசை பூந்தோட்டம் லத்திகா மற்றும் ரெத்தினக்கோட்டை அடைக்கலம் வண்டியும், 4-வது பரிசை சிங்கவனம் ஜமின்ராஜா வண்டியும் பெற்றது.

சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கோட்டணத்தாம்பட்டி தவமுருகு மற்றும் புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 4-வது பரிசை வைரிவயல் வீரமுனியாண்டவர் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை திருப்பன் துருத்தி ஆனந்தஅய்யனார் வண்டியும், 2-வது பரிசை பீர்க்கலைக்காடு பைசல் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி யாசிகா வண்டியும், 4-வது பரிசை அ.வல்லாளப்பட்டி பேச்சியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டி பந்தயம் இப்போது புத்துயிர்ப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் நாட்டு மாடுகளின் வளர்ப்பை நிச்சயம் உறுதிப்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க

கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது: குவிண்டால் ரூ. 2060க்கு கொள்முதல்!

டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்க மக்களுக்கு அதிகாரம்: புதிய சட்டத்திருத்தம்!

English Summary: Traditional Games: Cow Cart Racing in Karaikudi!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.