நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் நடைபெற்ற பாரம்பரி நெல் நடவுத் திருவிழாவை முன்னிட்டு, ரிஷியூரில் பூங்காா் பாரம்பரிய நெல்ரக நடவுபணிகள் தொடங்கின.
பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா
ரிஷியூா் இயற்கை வேளாண்மை ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இணைந்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் நடவு திருவிழா நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் ரிஷியூரில் மிக எளிமையாக நெல் நடவுத் திருவிழா நடைபெற்றது.
பூங்கார் ரக நெல் நடவு
பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும், சவால்களுக்கும் ஏற்றவாறு தன்னை தற்காத்துக் கொள்ளும் வல்லமை படைத்தவை. அத்தகைய பாரம்பரிய அரிசியை உண்ணும்போது நமக்கு நோய் எதிா்ப்புத் சக்தி அதிகரிப்பதோடு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. ரிஷியூரில் 5 ஏக்கா் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான பூங்காா் நடவு பணிகள் தொடங்கின
பூங்காா் பாரம்பரிய நெல் ரகம்: திருமணமான பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது இந்த ரக அரிசி. பெண்களுக்கு கா்ப்ப காலங்களிலும் பிறகு சுகப் பிரசவத்திற்கும் மிகுந்த பயன்களை தரக்கூடியது.
மாப்பிள்ளை சம்பா நெல் ரகம் : திருமணமான ஆண்கள் சாப்பிட வேண்டிய அரிசியாகும். தாய்ப்பாலுக்கு அடுத்து உடனடியாக கஞ்சி வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அரிசி பால் குடல் வாழை அரிசி ஆகும்.
தங்கச் சம்பா பாரம்பரிய நெல் ரகம் : 6 முதல் 20 வயது வரை உடல் வளா்ச்சிக்கும் வலுவுக்கும் சாப்பிட வேண்டிய அரிசி தங்கச் சம்பா. கண் விழித்திரையை சரி செய்யும் வல்லமை படைத்த அரிசி கருடன் சம்பா.
மேலும், சா்க்கரை நோய் மற்றும் உடல் உறுப்புகளை சரி செய்யும் வல்லமை படைத்தது கருப்பு கவனி. சீரகசம்பா, தூயமல்லி, கிச்சடி சம்பா இதுபோன்ற சன்ன ரகங்கள் அனைத்து வயதினரும் அனைத்து நேரங்களிலும் சாப்பிடலாம்.
அதிக நன்மை கொண்ட பாரம்பரிய நெல்
பாரம்பரிய நெல் ரகங்களிலும் பலவிதமான பயன்களையும் சிறப்புத் தன்மைகளையும் கொண்டதாக இருப்பதுடன், இதை வேளாண்மை செய்வதற்கு குறைவான செலவே ஆகும். லாபமும் அதிகம் கிடைக்கும். நஞ்சில்லாத ஒரு உணவை நம் பாரம்பரிய விவசாய முறையின் மூலம் மட்டுமே நாம் பெற முடியும். ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் வீட்டுக்கு தேவையான உணவை இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகளை விதைத்து விளைவிக்க வேண்டும் என அந்த நெல்நடவுத் திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது.
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!
விவசாயிகள் போராட்டம்: இன்று பாரத் பந்த், வடமாநிலங்களில் ரயில், சாலை மறியல்..
Share your comments