இந்தியா இறால்களுக்கு உலக சந்தையில் எப்போதும் நல்ல மதிப்பு உண்டு. அமெரிக்காவின் தற்போதைய டிரம்ப் அரசு சீனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தக ரீதியான பனி போர் முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா அரசு தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறால் மற்றும் கடல் சார்த்த உணவு பொருட்களுக்கு 10% இல் இருந்து 25 % ஆக வரியினை உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியா இறால்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்கு தேவை அதிகம் இருப்பதால் அவ்வகையான தொழிலினை அரசு ஊக்க படுத்த வேண்டும். இந்தியா மிக குறைத்த அளவிலான தொழிற்சாலைகள் பதப்படுத்தப்பட்ட, சூடு மட்டும் செய்து சாப்பிடக்கூடிய பொருட்களை தயாரித்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற உணவுகளுக்கு தேவை அதிகம் இருப்பதால் இந்தியாவில் இது போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று இறால் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கூறினார்.
கடந்த ஆண்டு இந்தியா 35,000 டன் அளவிலான மதிப்பு கூட்டபட்ட பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து உள்ளது. இதில் அனைத்து வகையான பதப்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும். இதன் மூலம் நமக்கு 350 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடல் உணவு, கடல் சார்த்த உணவு, மற்றும் பதப்படுத்தபட்ட உணவு ஆகியவைகளின் தேவை எப்பொழுதும் இருப்பதினால் அதற்கான சந்தை நமக்கு சாதகமாக உள்ளது எனலாம். எனவே இந்த வர்த்தகத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முறையான சேமிப்பு கிடங்கு, தேவையான இட வசதி, சுகாதாரமான தொழிற்சாலைகள் ஆகியன இன்றியமையாத ஒன்றாகும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் இறால் சேமிப்புக்கு உகந்த மாதமாகும்.
Share your comments