சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது.
சுனாமி எச்சரிக்கையினைத் தொடர்ந்து, 5 மீட்டர் உயரமுள்ள சுனாமி பல மாகாணங்களை அடையும் என நம்பப்படும் நிலையில், ஜப்பானின் பல கடலோர நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானின் வட-மத்திய பகுதியில் திங்கள்கிழமை இன்று, 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கின. ஜப்பானிய பிரதம மந்திரி Fumio Kishida, ஒரு தொலைக்காட்சி உரையில், குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகளை நெருக்கமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
கிழக்கு டோயாமா ப்ரிபெக்சர் பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் ஆலன், ”பூகம்பம் ஏற்பட்டபோது தனது குடும்பத்துடன் புத்தாண்டு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்துள்ளார், நிலநடுக்கம் காரணமாக சில குடிநீர் கிளாஸ் மற்றும் பிற பொருட்கள் வீட்டைச் சுற்றி விழுந்து உடையத் தொடங்கியதாக” ஜப்பான் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். "நான் ஒன்பது ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறேன், இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் நான் உணர்ந்ததில்லை," என்றும் அவர் பத்திரிகையில் கூறியுள்ளார்.
அணுமின் நிலையங்களில் இதுவரை பாதிப்புகள் இல்லை:
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல்களால் Hokuriku Electric Power தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் அசாம்பாவிதங்கள் நடந்துள்ளதா என்பதை சரிபார்த்து வருவதாக NHK தெரிவித்துள்ளது.
கன்சாய் எலெக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதன் ”அணுமின் நிலையங்களில் தற்போது எந்த அசாதாரணங்களும் இல்லை, ஆனால் நிறுவனம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்றார்.
புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைப்பு- மாநிலம் வாரியாக விலை நிலவரம்!
மார்ச் 11, 2011 அன்று வடகிழக்கு ஜப்பானில் ஒரு பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கியது அனைவரின் நினைவிலும் நீங்காத வடுவாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஃபுகுஷிமாவில் அணுசக்தி உருகலைத் தூண்டியது பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது. புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது . ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி சில பகுதிகளில் தாக்கி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Read more: வடக்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு- ஜன.7 வரை மழைக்கு வாய்ப்பு
Share your comments