உலக மக்கள் தொகையில் 26 சதவிகிதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை என்றும், அதேப்போல் 46 சதவிகிதத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்றும் UN World Water Development Report 2023-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் தனது இலக்குகளை அடைய மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் UN World Water Development Report-2023 ல் வெளியிட்டுள்ளது.
ரிச்சர்ட் கானர் (அறிக்கையின் தலைமை ஆசிரியர்) இது குறித்து குறிப்பிடுகையில், “ இலக்குகளை அடைவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ஆண்டுக்கு 600 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1 டிரில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறினார்.
அறிக்கையின்படி, கடந்த 40 ஆண்டுகளில் உலகளவில் தண்ணீர் பயன்பாடு ஆண்டுக்கு 1 சதவீதம் அதிகரித்து வருகிறது, மேலும் மக்கள் தொகை வளர்ச்சி, சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் மாறுதல் ஆகியவற்றின் கலவையால் 2050 வரை இதே விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் குறிப்பாக நகரங்களில் மக்கள்தொகையின் விரைவான அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்பின் தன்மை அதிகரித்துள்ளது.
உலகளவில் மொத்த நீரிலும் 70 சதவீதத்தை விவசாய துறைக்கு பயன்படுத்துவதால், சில நாடுகளில் இப்போது சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்த முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றத்தின் விளைவாக, மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் தற்போது பருவகால நீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும் (குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் சஹாரா) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக, உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் அதிக அல்லது நெருக்கடியான நீர் அழுத்தம் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் 3.5 பில்லியன் மக்கள் வருடத்திற்கு குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையின் கீழ் வாழ்கின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாசுபாட்டைப் பொறுத்தவரை, மாசுபாட்டின் மிகப்பெரிய ஆதாரம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீராகும் என்று கானர் கூறினார். உலகளவில், 80 சதவீத கழிவுநீர் எந்த சுத்திகரிப்பும் இல்லாமல் சுற்றுப்புறத்தில் வெளியிடப்படுகிறது, மேலும் பல வளரும் நாடுகளில் இது 99 சதவீதமாக உள்ளது” என்றார்.
2000 ஆம் ஆண்டிலிருந்து, வெப்பமண்டலப் பகுதிகளில் வெள்ளம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது, அதே சமயம் வடக்கு மத்திய அட்சரேகைகளில் வெள்ளம் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை உண்டாக்கியுள்ளது.
மேலும் காண்க:
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசமா? FB- யில் மாறுபட்ட தகவல்.. குழப்பத்தில் கட்சி தொண்டர்கள்
Share your comments