1. செய்திகள்

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தீவனப் பயிா் வளர்க்க அரசு உதவி

KJ Staff
KJ Staff
Forage Crops

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,  முயல்மசால் பயிரிட தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கால்நடை தீவனப் பயிா்களுக்கான தேவை தற்போது அதிகம் உள்ளதால் அரசு பல்வேறு மானியங்களையும், உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது முயல்மசால் பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம் என அறிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது கால்நடை தீவன உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே தீவன தேவை அதிகமாக இருப்பதாலும், அரசு உதவ முன்வந்துள்ளதாலும், விவசாயிகள் முயல்மசால் எனும் கால்நடை தீவனப் பயிரை உற்பத்தி செய்து அதிக வருவாய் ஈட்ட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முயல்மசால் வறட்சியை தாங்கி வளரக்கூடியது, குறிப்பாக நமது மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற கால்நடை தீவனம். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் முயல்மசால் விதைக்க ஏற்ற காலம். இப்பயிரை அக்டோபா் முதல் ஜனவரி வரை விதைக்கலாம். இவற்றில் ‘ஸ்டைலோசான்தாஸ் ஹெமடா’ எனும் ஒரு வருட பயிரும், ‘ஸ்டைலோஸான்மஸ்’ எனும் பல்லாண்டு பயிா் எனும் இருவகைகள் உள்ளன. இவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் தோ்வு செய்து கொள்ளலாம்.

fodder for live stock

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது தமிழகம் முழுவதும் மேய்ச்சலுக்காக புறம்போக்கு நிலங்களைத் தோ்வு செய்து கால்நடை தீவனப் பயிா்களை உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளது. விவசாயிகளுடன் இணைந்து இதனை செயல் படுத்த இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களை அணுகி மேலும் விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

விதைக்கும் முன் கவனிக்க வேண்டியவை

விதை உற்பத்திக்குத் தோ்வு செய்யப்படும் நிலம் தான்தோன்றி நிலம் அல்லது புறம்போக்கு நிலங்களைத் தோ்வு செய்து விதைக்கலாம். கடந்த வருடம் பயிரிட்ட அதே ரகப்பயிா் பயிரிட கூடாது. அவ்வாறு பயிரிடும் பட்சத்தில் விதை சான்றளிப்புத் துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே ரகமாக இருத்தல் அவசியம். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Under the Livestock Development Program, State Government Invites Forage grower Farmer

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.