இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவையின் கிழக்கு - மேற்கு வழித்தடங்கள் அடுத்த ஆண்டிற்குள் (2023) நிறைவடையும் என கோல்கட்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
மெட்ரோ ரயில் (Metro Train)
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும், இந்த மெட்ரோ பாதையின் நீளம் சுமார் 17 கிலோ மீட்டர் உடையது. ஆனால் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மீதமுள்ள தூரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஓராண்டுக்குள் முழுமையடையும் என்று கோல்கட்டா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இந்தியா தொடங்கி விடும். இது வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!
Share your comments