உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூரில் நடைபெற்ற MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு மில்லினியர் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு நடைப்பெற்ற நிலையில், இதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களும் விவசாய பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் தனது உரையில் எடுத்துரைத்தனர்.
MFOI நிகழ்வின் முன்னோட்டம்:
இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூரில் சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
'விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். மஹிந்திரா டிராக்டர்ஸ் போன்ற முன்னணி விவசாயம் தொடர்பான நிறுவனங்களுடன், விவசாயத் துறை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்றிருந்த கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் பேசுகையில், விவசாய சமூகத்திற்கான நீடித்த அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். ஒரு விவசாயி என்ற முறையில், விவசாயிகளின் கடின உழைப்பு குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் அவர்களுக்குத் தகுதியான மரியாதை மற்றும் அங்கீகாரத்துடன் அவர்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்து MFOI நிகழ்வின் கருப்பொருளையும் விவசாயிகளிடம் விளக்கினார்.
மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா:
நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பேசுகையில், விவசாயிகளை மையமாகக் கொண்ட அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், க்ரிஷி ஜாக்ரன் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பினை வெகுவாகப் பாராட்டினார். விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசு திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். 500-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் 100 மில்லியனர் விவசாயிகளை அமைச்சர் மிஸ்ரா விருது வழங்கி கௌரவித்தார்.
SBI, CEAT மற்றும் GSP Crop Science Private Limited உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வின் ஸ்பான்சர்களாக தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
Read more:
8 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி- அரசாணை வெளியீடு!
Krishi Rin Mafi Yojana: விவசாய கடனில் ரூ.50000 தள்ளுபடி- கவனம் ஈர்க்கும் ஜார்க்கண்ட்
Share your comments