1. செய்திகள்

பட்ட படிப்புகளில் இந்தி மொழியினை கட்டாய படமாக்க யுஜிசி நிர்வாகம் முயற்சி

KJ Staff
KJ Staff
UGC Commission

நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என  புதிய தேசிய கல்வி கொள்கை வரைவில் குறிப்பிட பட்டிருந்தது. அதில் குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியனை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அறிவுப்பு வெளியானது. இதை எதிர்த்து தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் முழுவதும் கருத்து தெரிவித்தன. இதனால் பள்ளிகளில் அறிமுக படுத்த இருந்த மும்மொழி கொள்கையை கை விடபட்டது.  

தற்போது மத்திய அரசு கல்லூரிகளில் இந்தி மொழியினை யு.ஜி.சி.  மூலம்  கட்டாயமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி யு.ஜி.சி. அமைப்பானது அதன் கீழ் செயல் படும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அதன் உறுப்பு கல்லுரிகளுக்கும் இந்தி பாடத்தை கட்டாயமாக வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  

UDC Logo

நம் நாட்டில் இன்று பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாகும். எனவே கல்வி நிறுவனங்கள் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, அதை மாணவர்களுக்கு எங்கனம் பயிற்றுவிப்பது என முடிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுளளது. இதன் மூலம்  இந்தி அறிமுக படுத்த வேண்டும் என மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

கருத்து தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி மொழியினை திணிக்கும் முயற்சி வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என கூறியுள்ளது.  இதுபோன்ற முயற்சிகள்  மற்ற மொழி பேசுபவர்கள் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: University Grand Commission Planning To Introduce Hindi: Based On New Education Policy Draft

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.