ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிஏ3 வேரியண்ட்டும் இதில் வெளிவந்திருக்கிறது. ஒமிக்ரான் வைரசின் 'பிஏ.2' வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளது.
சவுமியா சாமிநாதன் (Sowmiya Swaminathan)
உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், ''பிஏ2 வைரஸ் பிஏ1 வைரஸை மாற்றி அமைக்கும். பிஏ2 வெகு சீக்கிரமாக பரவும் தன்மையைக் கொண்டது. அதே சமயம் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்த அளவுதான் இருந்தது.
பிஏ2 வைரஸ் (BA2 Virus)
ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் உருமாறும் போதும், அதன் தன்மைகளும் மாறிக்கொண்டிருக்கும். ஒமிக்ரான் வேரியண்ட்களில் இந்த பிஏ.2 மட்டும் பரிசோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறது. இதனால் கண்டறிவதில் சிரமம் இருக்கிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒமிக்ரானின் புது, வேரியண்ட்டால் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
தடுப்பூசி (Vaccine)
ஒமிக்ரான் வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்ததில், அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எப்படி டெல்டா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்ததோ, அதேபோல் இப்போதும் ஒமிக்ரானுக்கு எதிராகவும் ஒமிக்ரான் வேரியண்ட்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் கண்டிப்பாக வேலை செய்கின்றன'' என விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!
Share your comments