யு.பி.ஐ., எனப்படும், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை (UPI Transaction)
நம் நாட்டில் நகரங்கள் துவங்கி, கிராமங்கள் வரை கடைகளில், 'போன் பே, கூகுள் பே' போன்ற பணம் செலுத்தும் செயலிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, யு.பி.ஐ., என, அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து, சம்பந்தப்பட்ட கடைகளின் வங்கி கணக்கிற்கு, ஸ்மார்ட் போன் வாயிலாக எளிதாக இந்த முறையில் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. இதற்கு சேவை கட்டணம் எதுவும் இதுவரை வசூலிக்கப்படவில்லை.
இந்நிலையில், 'இனி யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்' என, சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மறுத்துள்ளது.
யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இதற்காகும் செலவு, வேறு வழிகளில் வாயிலாக சரி செய்யப்படும்' என, தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: EPFO முக்கிய அறிவிப்பு!
UPI பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Share your comments