UPSC CSE 2021 தேர்வுக்கான Result: இன்று UPSC சிவில் சர்வீஸ் 2021 தேர்வு முடிவுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந் நிலையில், அகில இந்திய தரவரிசையில், ஸ்ருதி சர்மா 1ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையுமே பெண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
முதலிடம் பிடித்துள்ள ஸ்ருதி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது, குறிக்கோள் மற்றவர்களையும் ஊக்கப்படுத்துகிறது.
''விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,'' என, குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது."
இது மட்டுமின்றி தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஸ்வாதிஸ்ரீ கூறியது: தேசிய அளவில், 42 வது இடமும், தமிழகளவில் முதலிடம் பிடித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா - பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே வேளாண் படிப்பில் சேர ஆசைக்கொண்டேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றேன். சென்னை மனிதநேயம் அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சிகளையும் பெற்றேன்.
முதல் முறை எழுதிய தேர்வில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை தேசிய அளவில், 126வது இடம் பிடித்து ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வானேன். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததால், மூன்றாவது முறையாக தேர்வு எழுதினேன். இதில் தேசிய அளவில், 42 வது இடம், பெற்றுள்ளேன். பொதுமக்களின் சவால்களை, கஷ்டங்களை தீர்க்கும் விதமாக கொள்கை ரீதியான முடிவெடுப்பேன்.
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த, இதோ சூப்பர் டிப்ஸ்!
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தருவேன். விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே முதன்மை கடமையாகும். அப்பா சுயதொழில் செய்கிறார், அம்மா போஸ்ட் ஆபிஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தங்கை உள்ளார். இது என் பெற்றோரின் கனவாகும். அதனால், அவர்களுக்கு இவ்வெற்றியால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
UPSC CSE முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 10, 2021 அன்று நடந்தது, தேர்வு முடிவுகள் அக்டோபர் 29 அன்று வெளியானது. முதன்மைத் தேர்வு ஜனவரி 7 முதல் 16, 2022 வரை நடத்தப்பட்டு, முடிவுகள் மார்ச் 17, 2022 அன்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. நேர்முகத்தேர்வின் கடைசிச் சுற்று ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி நிறைவுபெற்றது.
UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகள் 2021: அறிந்து கொள்ளும் முறை விவரம்:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் — upsc.gov.in
- முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் ‘UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவு 2021’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- முடிவு PDF கோப்பில் திரையில் தோன்றும்.
- பதிவிறக்கம் செய்து எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும் என அறிவுறுத்தப்படுகிறது.
PM Kisan தவணைத் தொகை- ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?
2020 ஆம் ஆண்டில், UPSC CSE இறுதித் தேர்வில் மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது. தேர்வில் சுபம் குமார் முதல் இடத்தையும், ஜாக்ரதி அவஸ்தி இரண்டாவது இடத்தையும், அங்கிதா ஜெயின் மூன்றாவது இடத்தையும் வகித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
இன்று முதல் ஜூன் 3ஆம் தேதி வரை, இம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Share your comments