Credit: Trichy News
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அதிலும் தற்போது கொரோனா நெருக்கடியால், 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தில் வேலை கிடைப்பது என்பது சந்தேகமே.
அப்படி பாதிக்கப்பட்டவரா நீங்கள்?. உங்களை முதலாளியாக்க கை கொடுக்கிறது தமிழக அரசின் UYEGP வேலைவாய்ப்பு திட்டம்.
UYEGP திட்டம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதன் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme) படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் என்பதை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை(Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
Credit:You Tube
தொழிலின் திட்ட மதிப்பு (Project Value)
உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் ரூ. 10 இலட்சம் வரைக் கடன் வழங்கப்படும்.
சேவை சார்ந்த நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
மானியம் (Subsidy))
அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக (Subsides) அரசு அளிக்கிறது.
கல்வித்தகுதி
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
சொந்த முதலீடு (Entrepreneur Contribution of Capital Investment)
சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாக (Owner Capital Investment) செலுத்த வேண்டும்.
வயது வரம்பு (Age Limit)
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
Credit:You Tube
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution)
UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர். வங்கிகள் முலம் 70 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income)
UYEGP திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள்
படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள் (DIC-District Industries Center), TIIC (The Tamilnadu Industrial Investment Corporation) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றை அணுகி விண்ணபிக்கலாம்.
பயிற்சி (Training)
இத்திட்டத்தின் பயனாளிகளை மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) தேர்ந்தெடுக்கிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI-ENTREPRENEUR DEVELOPMENT INSTITUTE) மூலம் ஒரு மாத கால தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
எனவே UYEGP திட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் ல் msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
மேலும் படிக்க...
நீண்ட ஆயுளைப் பெற வாழை இலைக்கு மாறுங்கள்!- நோய்களுக்கும் குட்பை சொல்லலாம்!
Share your comments