உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவியுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தடுப்பூசி (Vaccine) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 'நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என, பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தார். இந்த நிலையில், 'தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை' என, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், ''இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, முகங்கள் கவசம் அணிந்தால் நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்கலாம்.
மேலும் படிக்க
25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!
தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Share your comments