மத்திய அரசிடம் தமிழக அரசு தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்று நேரடியாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசிப்பதாக இருந்தது. இதற்கிடையில் மத்திய மந்திரி சபை மாற்ற ஏற்பட்டதால் பயணம் தள்ளிப் போனது.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது, கருப்பு பூஞ்சை மருந்தைக் கூடுதலாக பெறுவது போன்ற பல பிரச்சனைகள் குறித்து பேசினார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது,மத்திய அரசிடம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து எடுத்துரைத்ததாகவும், கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தியதாகவும்,மேலும் வரும் 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்துதல் மற்றும் தமிழகத்திற்கான கொரோனா நிதியை அதிகரிப்பது குறித்து வலியுறுத்துதல் ,அதனை தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும்படி கேட்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?
Share your comments