கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையானது கிலோ ரூ.200 என்கிற உச்சத்தை அடைந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அவற்றின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
ஆனால் நாவரத்தி விழாவின் தொடர்ச்சியாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் காய்கறிகளின் விலை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் முக்கிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.240-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இஞ்சி உணவு வகைகளில் சுவையூட்டும் பொருள் மட்டுமின்றி, மருத்துவ குணமும் வாய்ந்தது. இஞ்சி பெரும்பாலும் நாம் அன்றாடம் பருகும் தேநீர்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோவுக்கு 90 ரூபாயை நெருங்கியுள்ளது.
இந்த விலை உயர்வானது தற்காலிகமாக இருக்குமா? இல்லை தக்காளியினைப் போல் புதிய உச்சத்தை தொட்டு வீழ்ச்சியடையுமா என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-
- Onion Big (பெரிய வெங்காயம்) - ₹44
- Onion Small (சின்ன வெங்காயம்) - ₹90
- Tomato (தக்காளி) - ₹20
- Green Chilli (பச்சை மிளகாய்) - ₹30
- Beetroot (பீட்ரூட்) - ₹35
- Potato (உருளைக்கிழங்கு) - ₹30
- Amla (நெல்லிக்காய்) - ₹89
- Bitter Gourd (பாகற்காய்) - ₹30
- Bottle Gourd (சுரைக்காய்) - ₹20
- Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
- Broad Beans (அவரைக்காய்) - ₹60
- Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
- Broad Beans (அவரைக்காய்) - ₹60.
- Cabbage (முட்டைக்கோஸ்) - ₹12
- Carrot (கேரட்) - ₹30.
- Cauliflower (காலிஃபிளவர்) - ₹25.
- Cluster beans (கொத்தவரை) - ₹25.
- Coconut (தேங்காய்) - ₹26.
- Cucumber (வெள்ளரிக்காய்) - ₹20.
- Drumsticks (முருங்கைக்காய்) - ₹65.
- Brinjal (கத்திரிக்காய்) - ₹30.
- Brinjal (Big) (கத்திரிக்காய்) - ₹50.
- Brinjal (Green) (கத்திரிக்காய்) - ₹30.
- Elephant Yam (சேனைக்கிழங்கு) - ₹45.
- French Beans (பீன்ஸ்) - ₹80.
- Ginger (இஞ்சி) - ₹240.
- Green Peas (பச்சை பட்டாணி) - ₹150.
- Mango Raw (மாங்காய்) - ₹100.
- Ladies Finger (வெண்டைக்காய்) - ₹30.
- Pumpkin (பூசணி) - ₹20.
- Radish (முள்ளங்கி) - ₹40.
- Baby Corn (சிறிய மக்காச்சோளம்) - ₹85
- Banana Flower (வாழைப்பூ) - ₹25
- Capsicum (குடைமிளகாய்) - ₹50
- Capsicum Red (குடைமிளகாய்) - ₹150
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைத் தொடங்கி உள்ள நிலையில், விளைச்சல் பாதிப்பு இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்தில் பல இடங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
யப்பாடா.. 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிவு- இன்றைய விலை?
20 வருஷத்துக்கு முன்னாடி அவர் வந்தார்- நடிகை கௌதமியின் அறிக்கையால் பரபரப்பு
Share your comments