ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, சத்தியமங்கலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து தினமும் காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. தினமும் 20 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறையத் தொடங்கியது.
காய்கறி விலை (Vegetables Price)
காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக கேரட் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் பலர் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி விட்டனர். இதன் காரணமாக காய்கறிகளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரம் காய்கறிகள் வரத்தும் குறைந்து வருகிறது.
தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு 10 டன் காய்கறிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகள் விலை ரூ. 10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் ரூ.80க்கு விற்ற ஒரு கிலோ கேரட் இன்று 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல, கடந்த வாரம் ரூ. 30க்கு விற்ற ஒரு கிலோ முள்ளங்கி இந்த வாரம் ரூ. 60க்கு விற்பனையானது.
விலைப் பட்டியல் (Price List)
- கேரட் - 100,
- பீன்ஸ் - 100,
- வெண்ணங்காய் - 40,
- பாகக்காய்-60,
- பீர்க்கங்காய் - 60,
- அவரைக்காய்-70,
- மிளகாய் - 70,
- இஞ்சி - 70,
- முட்டைகோஸ் - 30,
- முருங்கைக்காய் - 50,
- பீட்ரூட் - 60,
- காலிபிளவர் - 50,
- தக்காளி - 35,
- சின்ன வெங்காயம் - 50
- பெரிய வெங்காயம் -30
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் இன்று பெரும்பாலான இறைச்சி கடைகள், மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு டோனி பிரிட்ஜ் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் படிக்க
முடிவுக்கு வரும் 2 திட்டங்கள்: மூத்த குடிமக்கள் அதிர்ச்சி!
ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Share your comments