1. செய்திகள்

நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?

Daisy Rose Mary
Daisy Rose Mary

மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்

மண்புழு உரம் தயாரிப்பு முறை

  • உரம் தயாரிக்க விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய இடங்களில் நிழலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

  • நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும். அல்லது பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

  • இந்த பிளாஸ்டிக் பையினுள் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட்டு நிரப்ப வேண்டும்.

  • தொட்டியின் மேல் பகுதியை தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும். சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூடி, விலங்குகள் மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • காலை, மாலைகளில் என இருவேளைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

  • டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழுகள் விதம் போட்டு வைத்தால் 45 நாட்களில் உரம் உருவாகும்.

  • இவ்வாறு செய்வதன் மூலம் 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்க முடியும். இதற்கான முதலீடு வெறும் 800 ரூபாய் மட்டுமே

மேலும் படிக்க...

விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

நெற் பயிரைத் துவட்டி எடுக்கும் தண்டு துளைப்பான் நோய்- துவம்சம் செய்ய எளிய வழிகள்!

 

English Summary: Vermicompost Business that gives a steady income! Here the method to prepare Published on: 18 June 2021, 10:46 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.