மதுரை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பொதுமக்கள் சிலைகளை கரைப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி (Vinayakar Chaturthi)
கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளதாவது: விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக், தெர்மகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்க்கூறுகள், வைக்கோலை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்றவற்றை மட்டுமே சிலை தயாரிக்க, பந்தலை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் பூச்சுக்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் மீது எனாமல், செயற்கை சாயத்தையும் பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளையே பயன்படுத்தலாம்.
கரைக்கும் இடங்கள்
வைகை, கீழ்தோப்பு, ஒத்தக்கடை குளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்யனார் கோயில் ஊருணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன்குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கண்மாய், திருமங்கலம் சிவரக்கோட்டை கமண்டல நதி, மேலுார் கொட்டாம்பட்டி சிவன் கோயில் தெப்பம் பகுதிகளில் சிலைகளை கரைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
வாழைப்பழத் தோல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!
அரசு பானமாக மாறுமா தென்னீரா பானம்? தென்னை விவசாயிகள் கோரிக்கை!
Share your comments