தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல், ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 12ல் துவங்கி, 19ல் நிறைவு அடைந்தது. மார்ச் 22ல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், பிரசாத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் (ஏப்.,4) இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது.
அனல்பறந்த பிரசாரம்
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் (Election officers) நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தொடங்கியது வாக்குப்பதிவு
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு (Vote Polling) இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா (Corona) தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபை தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!
கணவன் மனைவி கூட்டாக சேமிக்க அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்! இருவருக்குமே மாத வருமானம்!
Share your comments