தமிழக சட்டசபைக்காக தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் மூலம் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
தபால் ஓட்டு
தபால் வாக்குகள் என்பது வழக்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. தபால் ஓட்டு போடுவதற்கு வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த நாளில், எந்த வாக்காளர் வீட்டிற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.
7300 பேர் விண்ணப்பம் ஏற்பு
சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேர் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 7,300 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் எந்த நாளில், எந்த வாக்காளர் வீட்டிற்கு செல்வது என்பது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு முறை வாய்ப்பு
தபால் வாக்கு பணிகளை மேற்கொள்ள 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினமும் 15 வாக்குச் சீட்டுகளைக் கொடுத்து, வாக்களித்த பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வர். வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பது, வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும். இக்குழு 2 முறை வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும். அவ்வாறு 2 முறை சென்றும், வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், அவர்கள் வாக்களிக்க இயலாது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வந்தும் அவர்கள் வாக்களிக்க முடியாது.
Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!
Election 2021: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
Share your comments