உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த இளையத் தளபதி நடிகர் விஜய், வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதற்காகவும், வரிசையில் நிற்காமல் ஓட்டு போட்டதற்காகவும், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
தமிழக அரசியலில் நுழைய நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் நீண்ட நாட்களாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான சந்தர்பத்திற்காக அவர்கள் காத்திருந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நடிகர் விஜய் தன் ஆதரவாளர்களை நேரடியாக களம் இறக்கியுள்ளார்.
கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக போட்டியிட்ட விஜய் ஆதரவாளர்கள், இம்முறை, விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கினர்.
வாக்களிப்பு
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நடிகர் விஜய், சென்னை, நீலாங்கரையில் உள்ள 192வது வார்டுக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஓட்டு அளித்தார்.
மன்னிப்பு
இம்முறை ரசிகர்கள் புடைசூழ காரில் வந்தார். விஜய்யின் வரவால், வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், வரிசையில் நிற்காமல் நேராகச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் தம் செயலுக்காக, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார்.
தொடரும் சர்ச்சை
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசும்பொருளாக மாறியது. விஜய் நாட்டிலுள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துதான் சைக்கிளில் வந்தார் என ஒரு சர்ச்சை கிளம்பியது.
அதேபோல, இம்முறை சினிமா பாணியில், காரில் வந்ததுடன், வரிசையில் நிற்காமல் நின்று வாக்களித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் விஜய்.
மேலும் படிக்க...
மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!
Share your comments