தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி மே 19 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைமையிலான அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டம் கொண்டு வரப்படும் புதிய ஓய்வூதியதிட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
உண்ணாவிரதப் போராட்டம்
தற்போது ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி உடனடியாக பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வரும் 19ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இவர்களுக்கு மட்டும் ரயிலில் பயணிக்க 50% கட்டண சலுகை!
Fixed Deposit: மூத்த குடிமக்களுக்கு வட்டியை அதிகரித்த பஜாஜ் பைனான்ஸ்!
Share your comments