தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டு அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசியாக வெளியிட்ட அறிவிப்பின் படி, 202 மார்ச் 31ஆம் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும்.
கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் நிறையப் பேர் இணைக்காமல் இருக்கின்றனர். மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு முடக்கப்பட்டுவிடும். அதேபோல, அபராதம் போன்ற தண்டனைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதைச் செய்யத் தவறியவர்களுக்கு 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பான் கார்டை ஆதாருடன் இணைப்பது ஈசிதான்.
வருமான வரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வெப்சைட்டில் சென்று சுலபமாக இணைத்துவிடலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருந்தாலே போதும்.
SMS மூலமாகவும் நீங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்> என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! 90% மானியத்துடன் மத்திய அரசு திட்டம்!
மத்திய அரசின் திட்டம்: பெண்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும், விவரம் இதோ!
Share your comments