முழு சூரியகிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணமானது 4 நிமிடங்கள் 33 நொடிகள் மட்டுமே நிகழ கூடியது. இந்த வருடத்தில் நிகழும் முதல் சூரிய கிரகணம் என்பதால் உலக மக்கள் அனைவரும் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கும் நிகழ்வாகும். அதாவது சூரியனின் ஒளிக்கதிர்களை முழுமையாக சந்திரன் மறைப்பது ஆகும். இத்தகைய அரிய நிகழ்வானது இந்தியா நேரப்படி இரவில் நிகழ்கிறது என்பதால் நம்மால் பார்க்க இயலாது.
பெரும்பாலன சூரிய கிரகணம் தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் நிகழ்கிறது, இதனால் அதன் அருகில் அமைந்திருக்கும் நாடுகள் எளிதில் பார்க்கும் படும் படி அமைந்து விடுகிறது. இன்று நிகழவிருக்கும் கிரகணம் சிலி நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை லா செரீனா எனும் நிகழவுள்ளது.
சூரிய கிரகணத்தின் காரணமாக சிலி, அர்ஜெண்டினா, மற்றும் சில தெற்கு பசுபிக் நாடுகள் கிரகண சமயத்தில் இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.space.com/ என்ற இணையம் அளித்த தகவலின் படி கிரகணமானது இந்திய நேரப்படி இன்று இரவு 10: 24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2:14 மணிக்கு முழுமையடைகிறது என தகவல் வெளியிட்டுள்ளது.
முழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் நேரடியாக இந்த சூரிய கிரகணத்தைக் காண சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எக்ஸ்ப்ளோரேடோரியம் என்ற மியூசியத்தின் https://www.exploratorium.edu/ என்ற இணைய தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய நேரப்படி விடியற்காலை 12:53 மணி முதல் இதன் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments