கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. நிழலில் நின்று 10 ரூபாய்க்கு நாட்டுத் தண்ணீர் பழம் வாங்கித் தின்னும்போது, எத்தனை செல்சியஸ் டிகிரி வெயில் அடித்தாலும் அதை உணர முடியாது. உண்மையில் இந்த பழங்களை விவசாயிகள் கண்ணீரைச் சிந்தி வளர்க்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
விவசாயிகள் கவலை
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயப் பணி பிரதானத் தொழிலாக உள்ளது. இந்தநிலையில் கோடைக் காலத்தையொட்டி வேடபட்டி, பூலுவம்பட்டி, இருட்டு பள்ளம், சேம்மேடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்துள்ளனர். ஆனால் கொரோனா (Corona) நோய்த்தொற்று பரவுதல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில், தர்பூசணி, வெள்ளிரிக்காய் மற்றும் முலாம் பழங்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாக, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை (Lockdown) அறிவித்தது தமிழக அரசு. இதனால், தர்பூசணிக்கு எதிர்ப்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதோடு, விற்பனையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டுமே, இவர்களின் நிலை மாறும்.
மேலும் படிக்க
கோடையில் கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க அருமையான நாட்டு மருந்து
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!
Share your comments