கொரோனா மூன்றாம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும், என்று இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அன்பரசன் (Dr. Anbarasan) தெரிவித்துள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் அடுத்த அலைக்கும் வாய்ப்பிருப்பதால், அதனைத் தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்.
3வது அலைக்கு வாய்ப்பு:
கொரோனா வைரசில் (Corona Virus) நிறைய மாற்றங்கள் நிகழ்வதாலேயே, கொரோனா மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. அதை தடுக்க இப்போதே தயாராக வேண்டும். 18 வயதுக்குட்பட்டோர் இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ளனர். இவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இப்போது வரை உலகில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இவர்களை நம்மால் கொரோனாவுக்கு எதிராக காப்பாற்றும் வழிமுறைகள் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.
ஒரு வேளை 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டால், இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேரை கொரோனாவுக்கு எதிரானவர்களாக நம்மால் மாற்ற முடியும். அப்படி செய்தால் கொரோனா பரவும் விகிதம் தடுக்கப்பட்டு கொரோனாவின் வீரியமும் குறைக்கப்பட்டு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தீவிர கொரோனா தாக்குதலில் இருந்து ஓரளவு நம்மால் காக்க முடியும். உருமாறிக்கொண்டே இருக்கும் கொரோனாவை அழிக்க தடுப்பூசிகளும் மேம்படுத்த வேண்டியது அவசியம். அதற்கான ஆய்வுகள் முக்கியம். அப்போது தான் அடுத்தடுத்து வரும் கொரோனாவை நம்மால் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
தடுப்பூசி இறக்குமதி
இதனால் பிற நாடுகளில் இருந்து தடுப்பூசி (Vaccine), ஆக்சிஜன் (Oxygen) போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டும். அத்துடன் மாவட்டம் தோறும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும். வருங்காலங்களில் அது பயனுள்ளதாக அமையும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
உரிய ஆவணம் இல்லாவிட்டால் இ-பதிவு ரத்து செய்யப்படும்!
கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Share your comments