வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. கடந்த வாரம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது குறிப்பிடதக்கது.
மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டன.
அந்த வகையில் “தென் கேரளாவிலிருந்து வட உள்கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி"-யின் காரணமாக இன்று 01.02.2022, தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த நான்கு நாட்களான வருகிற, 02.02.2022. முதல் 05.02.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்பது குறிப்பிடதக்கது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கையும் "ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சமின்றி மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்.
மேலும் படிக்க:
சென்னை மெட்ரோவை 118.9 கிமீ விரிவுப்படுத்த ரூ. 63,000 கோடி ஒதுக்கீடு! மேலும் பல அறிவிப்புகள்!
பட்ஜெட் 2022: தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
Share your comments