தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். எந்தந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு, எந்தந்த மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிந்துக்கொள்ள, கீழே படிக்கவும்.
இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில்: உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
ஜனவரி 26 மற்றும் 27
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 28 வானிலை
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.
ஜனவரி 29 மற்றும் 30
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை (As for Chennai)
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில், மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen on January 28 and 29)
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ, வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தங்கம் விலை மாற்றம், ரூ. 504 சரிவு! விவரம் உள்ளே!
வறட்சி மற்றும் நீர் நிலைகளை சமாளிக்க திட்டங்கள் தயார், ரூ.494 கோடி ஒப்புதல்
Share your comments