சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, முடிச்சூர், அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் கொடுங்கையூர் போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது வருகிறது.
கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
மழை நிலவரம்
சென்னையில் அதிகாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அயனாவரத்தில் 9 செ.மீ, பெரம்பூரில் 8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருவள்ளூரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூண்டியில் 20 செ.மீ, திருத்தணியில் 15 செ.மீ, சோழாவரத்தில் 13 செ.மீ, திருவாலாங்காட்டில் 12 செ.மீ, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 10 செ.மீ, செங்குன்றத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments