சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரவித்துள்ளது. சென்ற மாதம் முதல் சென்ற வாரம் வரை கன மழை காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதே பெரும் பிரச்சனையாக இருந்தது. எனவே அவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
மழை தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று(11-12-21) வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும், மற்ற மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், மேலும் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (12.12.2021) தமிழ்நாட்டில்- புதுவை, காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திங்கட்கிழமை (13.12.2021) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செவ்வாய்க்கிழமை (14.12.2021) தமிழ்நாட்டில்- புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை (15.12.2021) தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், மற்றும் சில மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பொழியும். இத்தகவல் வெளியில் செல்வோருக்கு பயனுள்ளதாகயிருக்கும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
வீடு திரும்பும் விவசாயிகள்! முடிந்ததா விவசாய போராட்டம்!
Post Office-இன் சூப்பர்ஹிட் திட்டம், வருமானத்திற்கான உத்தரவாதம்!
Share your comments