அரசு விரைவு பஸ்களில், வருவாயை பெருக்கும் வகையில், கூரியர் மற்றும் பார்சல் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கி.மீ., அடிப்படையில், தினசரி மற்றும் மாதக் கட்டணத்தில், இந்த பார்சல் சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
பார்சல் சேவை (Parcel Service)
பார்சல் சேவைத் திட்டம் தொடங்கிய முதல் நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்துார், துாத்துக்குடி, விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை; கோவையில் இருந்து குருவாயூர்; திருச்சியில் இருந்து திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் நேற்று பார்சல் அனுப்பப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே, 2,000 கிலோவுக்கு மேல் பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பார்சல் சேவையில், 80 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு, கி.மீ., அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவு பஸ்களில் அனுப்பப்படும் பார்சல்கள், தனியார் லாரிகளில் அனுப்புவதை விட, விரைவாக சென்று சேரும் என்பதால், தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் பார்சல்களை அனுப்ப, பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறையின் இந்த சேவையால் பலரும் பயன்பெறுவார்கள். மேலும், இத்திட்டத்தௌ தொடங்கிய முதல் நாளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், வரும் நாட்களில் பார்சல் சேவை தனி முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க
Share your comments