கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற விவசாயிகள் தங்களின் கடன் தொகையை வரும் ஆகஸ்ட் 31-க்கு முன்பு திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் கடனுக்கான 3 சதவீத வட்டி தள்ளுபடியைப் பெற முடியாது.
கிசான் கிரெடிட் கார்டு கடன்
கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit card) மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்குக் கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை. மேலும் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். குறுகியகால கடன் தவணையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணத்தால் பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளில் வங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முதலில் மே மாதம் வரை தனது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த கால அவகாசத்தை மேலும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தகவல் இது வரை கிடைக்கப்பெறவில்லை, எனவே விவசாயிகள் தங்களின் கடன் தொகையை வரும் 31-ம் தேதிக்குள் செலுத்திவிடவேண்டும்.
கடனை செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?
கிசான் காட்டு மூலம் பெறப்படும் கடன்களுக்கு முறையாக 9 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. இதில் 2 சதவீதம் மத்திய அரசு மானியமாக வழங்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடியும் செய்யப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கிசான் கார்டு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் 3 சதவீத வட்டி தள்ளுபடியை விவசாயிகள் பெறமுடியாது.
எந்த எந்த வங்கிகள் கிசான் கடன் அட்டைகளை வழங்குகின்றன?
நபார்ட்(NABARD), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பேங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.
மேலும் படிக்க...
கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,02,065 கோடி சலுகை கடன்- மத்திய அரசு!!
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments