1. செய்திகள்

கொடுமுடியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Kodumudiyaru dam open for irrigation

Credit :Daily Thanthi

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையிலிருந்து, கார் பருவ சாகுபடிக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் 5,780 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கொடுமுடியாறு அணை திறக்க உத்தரவு 

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு (Kodumudiyaru) நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக 28.8.2020 முதல் 25.11.2020 வரை விநாடிக்கு 50 க.அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க...

Kisan Credit card: கிசான் கிரெடிட் கார்டு கடனை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

வீடு தேடிவரும் வரும் மொபைல் ATM - SBI அறிமுகம்!!

 

English Summary: Chief Minister orders to open water from Kodumudiyaru dam

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.