What! The next earthquake in India!
துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த டச்சு நாடு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் அடுத்த பயங்கரமான நிலநடுக்கம் இந்தியாவில் நிகழவுள்ளதாக கணித்துள்ளது இந்திய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது குறித்த சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சென்ற திங்கள்கிழமை துருக்கியில் மிகவும் கொடூரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 15,000 பேர் உயிரிழந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் அடுத்தடுத்த நாட்களில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பல நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அங்கு பலர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
துருக்கி நிலநடுக்கம் நிலநடுக்க இடுக்குகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இரவு நேரத்தில் அங்கு நிலவும் கடுமையான பனி மீட்புப் பணிகளுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15000 தாண்டியது மிகவும் வருத்தத்திற்குரிய தகவல்.
துருக்கி நாட்டில் மட்டும் இதுவரை 12,931 பேரும் சிரியாவில் 2992 பேரும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,383ஆக உயர்ந்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்பட மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை கணித்திருந்தார்.
விரைவில் மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று கணித்து ட்வீட் செய்திருந்தார்.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம் நிலவ உள்ளதாக அவர் தெரிவித்திருப்பது பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், "வளிமண்டல ஏற்ற இறக்கங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த பகுதிகளில் பெரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது துல்லியமான கணிப்பு இல்லை. தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து பெரிய நிலநடுக்கங்களும் வளிமண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இது தற்காலிகமான கணிப்புகள் மட்டுமே" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கத்தை முன்பே கணித்தவர் என்பதால் இவரது வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் நிலநடுக்கங்களை எல்லாம் முன் கூட்டியே கணிக்க முடியாது என்றும் இவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
Share your comments